கடல் நகரம் அட்லாண்டிஸ் இருந்தது உண்மையா mystery of atlantis in tamil
mystery of atlantis
பண்டைய காலம் முதல் இன்றைய நாள் நாம் இதுவரை நிறைய நகரங்களை பார்த்திருப்போம் அதைபற்றி கேள்விபட்டிருப்போம் ஆனால் நம்மால் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு மர்மம் நிறைந்த கடலுக்கு அடியில் காணப்படும் நகரம் தான் இந்த அட்லாண்டிஸ் இந்த நகரத்தை பற்றிய வியப்பூட்டும் தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
அட்லாண்டிஸ் கண்டுபிடிப்பு
இந்த அட்லாண்டிஸ் நகரை பற்றி முதன்முதலில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பிளேடோ என்ற கிரேக்க தத்துவியலாளர் ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகிறார் . இந்த நகரத்தில் மனிதர்களும் கடவுள்களும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்றும் உலகின் மிகப்பெரிய செல்வமிக்க நகரமாகவும் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார் . இந்த நகரம் பல மர்மங்களை கொண்டி இருப்பதாக கூறப்படுகிறது
யார் இந்த பிளேடோ
இந்த பிளேடோ என்பவர் கிட்டதட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய தத்துவியலாளர் இவருடைய பாட்டானார்தான் இவருக்கு முதன்முதலில் இந்த அட்லாண்டிஸ் நகரம் பற்றி கூறுகிறார் அவருடைய பாட்டனார் எகிப்து நோக்கி பயணத்தை மேற்கொண்ட பொழுது அப்பொழுது ஒரு மனிதர்தான் இவருக்கு இந்த அட்லாண்டிஸ் பற்றிய தகவலை கூறுகிறார் .
கிரேக்க நீர் கடவுளான பொசைடன் முதன் முதலில் அட்லாண்டிஸ் நகரத்திற்கு வருகிறார் இந்த நகரம் நமது கண்டம் ஆசியாவை விட மிகப்பெரியதாக பரந்து விரிந்து காணப்படுகிறது அப்பொழுதி அந்த அட்லாண்டிஸ் நகரத்தை நாம் பார்க்கும்பொழுது அங்கு ஒரு பெண் மீது காதல் கொண்ட நீர் கடவுளான பொசைடன் அவரை திருமணமும் செய்துகொள்கிறார் . பிறகு அந்த நகரத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய வீட்டையும் அமைக்கிறார் . இந்த வீட்டை சுற்றி தண்ணீராலேயே பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்துகிறார்.
இதற்கு அருகிலேயே இன்னொரு மாளிகையையும் கட்டி அதில் பொசைடனின் முதல் மனைவியை சிறைபிடித்து வைத்துள்ளார் ஏனென்றால் அவர் தன்னுடைய கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைப்பதை விரும்பவில்லை இதனால் கோபமடைந்த பொசைடன் முதல் மனைவியை சிறைபிடித்தார் .
பொசைடனுக்கும் அவருடைய இரண்டாவது மனைவிக்கும் 10 குழந்தைகள் பிறக்கின்றன அதில் ஒருவர் தான் இந்த அட்லஸ், சிறிது காலம் கழித்து பொசைடனும் விண்ணுலகம் நோக்கி சென்றதால் அந்த மொத்த அட்லாண்டிஸ் நகரத்திற்கு அட்லஸ் மன்னன் ஆகிறான்.
அட்லஸ் மன்னாகிய பிறகு தன்னுடைய தந்தை பொசைடனுக்கு அந்த அட்லாண்டிஸ் நகரில் முழுவதும் தங்கத்தால் ஆன ஒரு மிகப்பெரிய சிலையை நிறுவிகிறார் . அந்த சிலையை பார்பதற்காக வந்த கிறீஸ் நாட்டு மக்கள் எங்குளுடைய நாடும் மிகசிறந்தது என்று தலைக்கணம் மிகுந்த அட்லாண்டிஸ் மக்கள் நாங்கள் கடவுள் போன்றவர்கள் என்று கூறி கிறீஸ் நாடு மீது போர் தொடுக்கின்றனர் . இதில் கிரேக்கர்களுக்கு ஆதரவாக கடவுள்கள் இருந்ததால் அட்லாண்டிஸின் மிகப்பெரியபடை கிரேக்க படையிடம் தோல்வியை காண்கிறது இதனால் மிகவும் கோபமடைந்த நீர் கடவுள் பொசைடன் அந்த அட்லாண்டிஸ் நகரம் முழுவதையும் நீருக்கடியில் மூழ்கடிக்க செய்கிறார் .இப்படிதான் பிளேடோ அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுருப்பார் இதிலிருந்து பிளேடோ நம்மிடம் கூறுவது என்னதான் கடவுளாக இருந்தாலும் தலைக்கணம் கர்வம் வந்தால் அவர்கள் வீழ்த்தபடுவார்கள் என்கதுதான்.
அட்லாண்டிஸும் பெர்முடா முக்கோணமும்
இவ்வாறு புனைக்கதைகளில் கூறப்பட்ட இந்த அட்லாண்டிஸ் நகரம் தற்போது பெர்முடா முக்கோணத்தின் கீழே இருக்கிறது என்று ஒரு சில மக்களால் கூறப்படுகிறது . பெர்முடா முக்கோணத்தில் ஏற்படும் அனைத்து மர்மங்களுக்கும் இதுதான் காரணம் என்றும் நம்பபடுகிறது. மற்றொரு மக்கள் தற்போதுள்ள பனிகண்டமான அண்டார்டிகா தான் அட்லாண்டிஸ் என்றும் காலபோக்கில் அட்லாண்டிஸ் முழுவதும் பனியால் சூழபட்டுவிட்டது என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில் அட்லாண்டிஸ் நகரம் இருப்பதற்கான சான்றுகள் ஒன்றுகூட இன்றுவரை கண்டுபிடிக்கபடவில்லை இது தத்துவவியலாளர் பிளேடோவால் உருவாக்கபட்ட கற்பனை கதை மட்டுமே அதைதவிர வேறொன்றும் கிடையாது .
Comments
Post a Comment