முதல் உலகப் போர் பற்றிய உண்மைகள் facts about 1st world war
நமது உலக வரலாற்றிற்கான தேடுதல் கல்வி சாலைகளோடு பெரும்பாலனவர்களுக்கு முடிந்து விடுகிறது. பின்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் உலகச் செய்திகளை அறிதல் நிறைவடைந்து விடும். சமீபகாலமாக நமது பணப்பைக்கு பத்திய சிகிச்சை அளித்து வரும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வு போன்ற விஷயங்களில் சர்வதேச எண்ணெய் நிலவரங்களை சிறிது அறிந்து கொள்வோம். அமெரிக்கா – ஈரானுடைய அணு ஆயுத ஒப்பந்தம், வெனிசுலா நாட்டின் பண வீக்கம் போன்ற ஏனைய காரணங்கள் கூட நமது எரிவாயு விலை ஏற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு நாட்டின் இன்றைய பிரச்சினைகளை நாம் ஆராய்ந்தால் அது நிச்சயம் வரலாற்று தொடர்புடையதாக இருக்கும். மன்னராட்சி முடிவு உலக வரலாற்றையும், வழித்தோன்றல்கள்களையும் நாம் அறிதல் மூலம் தற்பொழுதைய உலகளாவிய பார்வையை அகலப்படுத்திக் கொள்ள முடியும். நாடுகளில் மன்னராட்சி முடிவிற்கு வந்த தருணங்கள், சர்வதேச எல்லைகளில் உருவான மாற்றங்கள், வர்த்தக பொருட்களின் பரஸ்பர பரிமாற்றங்கள் போன்றவற்றை ஓரளவு அறிதல் மூலம் ஒவ்வொரு நாட்டின் தற்போதைய நிலைப்பாடுகளையும், மாற்றங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கானதொரு நல்ல தொடக்கம் முதலாம் உலகப் போரின்...