Posts

Showing posts with the label STORYS

யார் பெரிய சோம்பேறி

Image
யார் பெரிய சோம்பேறி ஒரு ஊரில் திடீர் என்று ஒரு அறிவுப்பு வந்தது ஊரில் யார் பெரிய சோம்பேறிேயோ அவருக்கு 1 லட்சம் பரிசு என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு லட்சம் என்றதும் பக்கத்து ஊரில் இருந்த சோம்பேறிகள் அனைவரும் அறிவிப்பு வந்த அரங்கத்தை நோக்கி சென்றுவிட்டனர். அரங்க மேடையில் இருந்து ஒருவர் வந்து அனைவருக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு அனைவரையும் பார்த்து ஊரில் இத்தனை சோம்பேறிகள் இருக்கின்றீர்கள் உங்களில் யார் இந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறீர்கள் கலந்து கொல்பவர்கள் கையை மேலே உயர்த்தி காட்டுங்கள் என்றார். அரங்கத்தில் ஒரே சலசலப்புடன் அனைவரும் ஒவ்வொருவராக கையை உயர்தினார்கள். மேடையில் இருந்தவர் அனைவரையும் பார்த்து கொண்டே வந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும் அவருக்கு எதுவும் கேட்காதது போல அமர்ந்து இருந்தார். அவரை பார்த்தவுடன் கூட்டத்தில் ஒரே நிசப்தம் நிலவியது, அவரை நோக்கி மேடையில் இருந்தவர் இறங்கி வந்தார். வந்தவர் அமர்ந்திருந்தவரிடம் நீங்கள் மட்டும் ஏன் கையை உயர்த்த வில்லை, உங்களுக்கு பரிசு வேண்டாமா என கேட்டார். அதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க எதுக்கு கஷ்டபட்டு கையதூக்க

தெனாலி ராமன் கதைகள் – அரசவை விகடகவியாக்குதல்

Image
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார் இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.தத்துவஞானியைப் பார்த்து, “ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?” எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்

பிறந்தநாள் பரிசு -தெனாலிராம் கதை -Thenali Raman Birthday Present

Image
அன்று அரசர் க்ரிஷ்னதேவராயருக்கு பிறந்தநாள் அதனால் ஊருல இருந்த எல்லாரும் அரசரை காண வந்திருந்தாங்க வந்தவங்க எல்லாரும் நிறய பரிசு பொருட்களை அரசருக்கு கொடுத்தாங்க அப்ப உள்ள வந்த தெனாலிராமன் கைல பெரிய பொட்டலம் இருந்துச்சு அத பாத்த எல்லாரும் அரசருக்கு ஏதோ மிக பெரிய பரிசு தெனாலிராமன் கொண்டு வந்திருக்காருன்னு நினைச்சாங்க அப்பத்தான் தெனாலிராமன் அந்த பரிசை பிரிக்க ஆரம்பிச்சாரு உள்ள இருந்து வெறும் துனியா வந்துச்சு ஒவ்வொரு துனியா அவுத்து கடைசியா ஒரு சின்ன டப்பாவ எடுத்தாரு தெனாலிராமன்அத பிரிச்சி உடனே அதுக்குள்ள இருந்து ஒரு புளியம் பழம் வெளிய வந்து விழுந்துச்சு அத பாத்தா அரசருக்கு ஒரே ஆச்சர்யம் ,என்ன தெனாலிராமா எல்லாரும் நிறைய பொருள் மதிப்புள்ள பரிசு கொடுக்கும்போது நீ மட்டும் புளியம் பழம் கொண்டு வந்திருக்கனு கேட்டாருஅதுக்கு தெனாலிராமன் ஒரு அரசர் எப்பவும் தன்னோட சுற்றத்தாருடன் ஒட்டாமலும் உரசாமலும் இந்த புளியம் பழம் போல இருக்கனும் ,அதே நேரத்துல குடிமக்களுக்கு இந்த கனியோட சுவைபோல இனிமையா இருக்கணும் இத உணர்த்ததான் இந்த பரிச உங்களுக்கு கொண்டு வந்தேன்னு சொன்னாரு தெனாலிராமன்

தெனாலிராமன் காளியிடம் வரம் பெற்ற கதை..! Tenali Rama Story..!

Image
  காளியிடம் வரம் பெற்ற தெனாலி..! Tenali Raman Stories Tamil..!  Tenali Raman Tamil Story:  வணக்கம் நண்பர்களே..! இன்றைய  tamil facts sp  பதிவில் குழந்தைகள் விரும்பி கேட்கும் தெனாலி ராமனின் சுவாரசியமான கதைகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். குழந்தைகள் அனைவருமே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வத்தை கொண்டவர்களாய் இருப்பார்கள். கதைகளில் நீதி கதைகள், பஞ்ச தந்திர கதைகள், தேவதை கதைகள், அரசர் கதைகள் என பல்வேறு கதைகள் உள்ளன. இவற்றையெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கூறுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் தெனாலி காளியிடம் வரம் பெற்ற கதையை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! தெனாலி ராமன் தோன்றிய வரலாறு: தெனாலி ராமன் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏழை குடும்பத்தில் ஆந்திர மாநிலத்தில் சிற்றூர் என்னும் ஊரில் பிறந்தார் தெனாலி. தெனாலி தன் இளமை வயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டார். தெனாலி ராமன் தன் தந்தையை இழந்த பிறகு தெனாலியின் தாய் மற்றும் தெனாலி அவரின் தாய்மாமன் வீட்டின் ஆதரவில் வாழ்ந்தனர்.தெனாலி ராமனுக்கு கல்வி கற்பது என்றாலே பிடிக்காத விஷயம். ஆனாலு

வித்தைக்காரனை வென்ற தெனாலியின் கதை..! Tenali Raman Story for Kids in tamil..!

Image
வித்தைக்காரனை வென்று கர்வத்தை அடக்கிய தெனாலி..! Tenali Raman Story For Kids in tamil..! Tenali Raman Kathai:  ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய  tamil facts sp  பதிவில் தெனாலியின் சாதுர்ய திறமையால் செப்படி வித்தைக்காரனை எப்படி வென்றான் என்பதன் கதையை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளப்போகிறோம். தெனாலி கதை என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சரி வாங்க நண்பர்களே இப்போது தெனாலிராமன் செப்படி வித்தைக்காரனை வென்ற கதைகளை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.. தெனாலி கிருஷ்ணதேவராயரை காண விஜயநகரம் சென்றான்: தெனாலி ராமன் ஒரு நாள் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் புகழை கேள்விப்பட்டதும் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக தெனாலி விஜயநகரம் சென்றான். தெனாலி அரசரை காண பல நாட்கள் அங்கேயே தங்கி இருந்தும் அவரை காண முடியவில்லை. அரசரை சந்தித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தினமும் அரண்மனைக்கு போவதும், வருவதுமாக இருந்தான் தெனாலி. வித்தைக்காரனை சந்தித்த தெனாலி: வித்தைகள் செய்து வேடிக்கை காட்டும் செப்படி வித்தைக்காரனை ஒருநாள் தெனாலிராமன் சந்தித்தான். தெனாலி மனதில் வித்தைக்காரனும் அரசரி

அக்பர் பீர்பால் கதைகள்[S

Image
  அக்பர் பீர்பால் கதைகள் [SP] 1. ஆந்தைகளின் மொழி [SP] அன்று காலை , அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார். [SP] அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார்.   சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து , பீர்பலின் மீது செலுத்திய அக்பர் “நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா ?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும் , “ மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது” என்றார் பீர்பல்.     “ பொய் சொல்லாதே , பீர்பல்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியு