சூரியபுயல் பூமியை அழிக்குமா sun storm explanation in tamil
sun storm explanation
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் சூரியனில் ஏற்படக்கூடிய சூரிய புயல் பற்றியும் அந்த சூரிய புயலால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா என்பதை பற்றியும் விரிவாக காணலாம்.
சூரிய புயல் என்றால் என்ன?
இந்த சூரியபுயல் என்பது சூரியனில் ஏற்படக்கூடிய ஒரு மாற்றம் என கூறலாம், அதாவது ஒவ்வொரு 11 வருடத்திற்கும் சூரியன் ஆனது தன்னுடைய காந்த துருவங்களை மாற்றும் அதாவது வட துருவம் தென் துருவமாகவும்,தென் துருவத்தை வட துருவமாகவும் மாற்றும் இப்படி மாற்றுவதால் சூரியனை சுற்றி கரும்புள்ளிகள் தோன்றும் இந்த கரும்புள்ளிகள் சூரியனை விட மிகவும் குறைந்த வெப்பத்தை கொண்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் அந்த இடத்தில் காந்தபுலம் அதிகமாக இருப்பதால் காந்தபுலம் ஒன்றினைத்து ஒரு வளையம் போன்று தோற்றமளிக்கும். இந்த கரும்புள்ளிகளில் இருந்துதான் சூரிய அலைகள் உருவாக்கபட்டு அதாவது புரோட்டான் மற்றும் நியுட்ரான் ஹைட்ரஜன் அயனி துகள்களை கொண்ட அலைகள் நம் பூமியை நோக்கி பயணிக்கும். இதைதான் அறிவியலாளர்கள் CORONAL MASS EJECTION என்று குறிப்பிடுகிறார்கள்.
முதல் சூரியபுயல்
இதுபோன்று விண்வெளியும் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய அமெரிக்காவை சேர்ந்த SPACE WEATHER என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த சூரிய புயல் ஆனது முதன் முதலில் 1859-ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது அப்பொழுது தற்போதைய தொழில்நுட்பங்கள் இல்லை அதனால் பெரும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை இருப்பினும் அன்றைய காலத்தில் பயன்படுத்தபட்ட மின்கம்பங்கள் டெலிகிராப்(தந்தி) போன்றவை வேலைசெய்யவில்லை சில தொலைதொடர்பு கருவிகள் கூட தீப்பிடித்து எரிந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர் இந்த நிகழ்வை கேரிங்டன் நிகழ்வு என அழைத்தனர். அதன்பிறகு 2012 மற்றும் 2020களில் இந்த சூரியபுயல் ஏற்பட்டது ஆனால் பெரிய பாதிப்புகளை பூமிக்கு ஏற்படுத்தவில்லை தற்போதுவரை இந்த சூரிய புயலால் 4 க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் அழிந்துள்ளன
சூரிய புயலால் பூமிக்கு ஆபத்தா
இந்த சூரியபுயலால் பூமிக்கு ஆபத்தா என்றால் ஆம் என கூறலாம் இருப்பினும் நம் பூமியின் மேல்பகுதியில் காணப்படும் மின்காந்தபுலம் இந்த சூரிய புயலை தடுக்கும் திறன் பெற்றது எப்பொழுது மின்காந்தபுலம் குறைகிறதோ அப்போது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது கூட ஆர்டிக் பகுதியில் காணப்படும் அர்ரோரா ஒளிகள் சூரியனிலிருந்து வரும் அலைகளால்தான் தெரிகிறது அங்கு சூரிய அலைகள் ஊடுருவ காரணம் வட மற்றும் தென் துருவ பகுதிகளில் பூமியின் காந்தபுலம் மிகவும் குறைவு.
எப்போது பூமியின் காந்தபுலம் குறைகிறதோ அல்லது சூரியனில் தீவிரமான புயல் ஏற்பட்டால் அது பூமியை தாக்கும்பொழுது தற்போது நாம் பயன்படுத்தும் பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் செயலிழக்க வாய்ப்புள்ளது குறிப்பாக நாம் பயன்படுத்தும் மொபைல்போன்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் இயங்காது இதன்காரணமாக இண்டர்நெட் வேலைசெய்யாது, தற்பொதைய கல்வி மருத்துவம் வங்கிகள் போன்ற அனைத்து துறைகளும் ஸ்தம்பிக்கும். அதுமட்டுமில்லாமல் காந்தபுலம் காரணமாக மின்கம்பங்கள் எரியும் இதனால் மின்சாரமும் கிடைக்காது,சொல்லபோனால் உலகம் கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிடும் பூமி அழியாவிடிலும் இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் இதை நம்மால் தடுக்க இயலாது என்பதே உண்மை.
நன்றி!
Comments
Post a Comment