பிறந்தநாள் பரிசு -தெனாலிராம் கதை -Thenali Raman Birthday Present
அன்று அரசர் க்ரிஷ்னதேவராயருக்கு பிறந்தநாள் அதனால் ஊருல இருந்த எல்லாரும் அரசரை காண வந்திருந்தாங்க
வந்தவங்க எல்லாரும் நிறய பரிசு பொருட்களை அரசருக்கு கொடுத்தாங்க
அப்ப உள்ள வந்த தெனாலிராமன் கைல பெரிய பொட்டலம் இருந்துச்சு
அத பாத்த எல்லாரும் அரசருக்கு ஏதோ மிக பெரிய பரிசு தெனாலிராமன் கொண்டு வந்திருக்காருன்னு நினைச்சாங்க
அப்பத்தான் தெனாலிராமன் அந்த பரிசை பிரிக்க ஆரம்பிச்சாரு உள்ள இருந்து வெறும் துனியா வந்துச்சு
ஒவ்வொரு துனியா அவுத்து கடைசியா ஒரு சின்ன டப்பாவ எடுத்தாரு தெனாலிராமன்அத பிரிச்சி உடனே அதுக்குள்ள இருந்து ஒரு புளியம் பழம் வெளிய வந்து விழுந்துச்சு
அத பாத்தா அரசருக்கு ஒரே ஆச்சர்யம் ,என்ன தெனாலிராமா எல்லாரும் நிறைய பொருள் மதிப்புள்ள பரிசு கொடுக்கும்போது நீ மட்டும் புளியம் பழம் கொண்டு வந்திருக்கனு கேட்டாருஅதுக்கு தெனாலிராமன் ஒரு அரசர் எப்பவும் தன்னோட சுற்றத்தாருடன் ஒட்டாமலும் உரசாமலும் இந்த புளியம் பழம் போல இருக்கனும் ,அதே நேரத்துல குடிமக்களுக்கு இந்த கனியோட சுவைபோல இனிமையா இருக்கணும்
இத உணர்த்ததான் இந்த பரிச உங்களுக்கு கொண்டு வந்தேன்னு சொன்னாரு தெனாலிராமன்
Comments
Post a Comment