நிலாவின் வியப்பான உண்மைகள் top 10 unknown facts about moon in tamil
facts about moon
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் இன்றுவரை நீங்கள் கேள்வியே படாத நிலாவை பற்றிய வியப்பூட்டும் தகவலை இந்த பதிவில் காண்போம்.
1.நிலவின் ஈர்ப்புவிசை
நம் பூமியை போன்றே நிலவிலும் ஈர்ப்பு விசை உண்டு ஆனால் அது நம் பூமியைவிட மிகவும் குறைவாக இருக்கும் இந்த குறிப்பிட்ட ஈர்ப்புவிசையால் நிலா நம் பூமியை ஒரே பாதையில் சுற்றி வருகிறது. அதுமட்டுமின்றி பூமியை விட நிலவில் 6 மடங்கு ஈர்ப்பு விசை குறைவு எடுத்துகாட்டாக நீங்கள் பூமியில் 100 கிலோ இருந்தால் நிலவில் வெறும் 40 கிலோவில்தான் இருப்பீர்கள்.
2. நிலவின் கால்தடம்
இந்த நிலாவில் முதலில் கால்பதித்தவர் நீல் ஆம்ஸ்டிராங் இவரின் கால்தடம் இன்றும் அங்கு அழியாமல் அங்கே அப்படியே உள்ளது இதற்கான காரணம் நிலாவில் வளிமண்டலமும் கிடையாது காற்றும் கிடையாது.
3. நிலவின் வடிவம்
நாம் அனைவரும் நிலவின் வடிவம் உருண்டை என நம்பிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் உண்மையில் நிலாவானது ஒரு முட்டை அல்லது எலுமிச்சை வடிவத்தில்தான் காணப்படும் அதுமட்டுமின்றி நாம் இன்றுவரை நிலவின் ஒரு பகுதியை மட்டுமே காண்கிறோம் நிலவின் மற்றொரு பகுதியை நாம் பூமியில் இருந்து காண இயலாது.
4. நிலவின் ஒளி
நாம் அனைவரும் நிலாவானது தானாக ஒளிர்கிறது என்று நினைத்திருப்போம் உண்மையில் நிலா தானாக ஒளிவிடுவதில்லை சூரியனிடம் இருந்த ஒளியை பிரதிபலிப்பதால்தான் நிலா இரவில் மிகவும் அழகாக தெரிகிறது.
5.நகரும் நிலவு
ஒவ்வொரு வருடமும் நிலவானது நம் பூமியை விட்டு 3.8 சென்டி மீட்டர் நகர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே சென்றால் நிலாவானது புவி ஈர்ப்பிலிருந்து விலகி நகர்ந்து சென்றுவிடும்.
6.நிலா எப்படி உருவானது
நிலா எப்படி உருவானது என்ற தெளிவான ஆதாரங்கள் இன்றளவும் கிடைக்கவில்லை ஆனால் இந்த கூற்று அனைவராலும் ஏற்கொள்ளபடுகிற சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவாகத் தொடங்கிய சிறிது காலத்தில், தியா என்று அழைக்கபடும் செவ்வாய் கிரகம் போன்ற ஒரு மிகப்பெரிய பாறை பூமியில் மோதியபோது தான் சந்திரன் உருவாகியது என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
7.நிலாவின் நிலநடுக்கம்
நம் பூமியை போலவே நிலவிலும் நிலநடுக்கம் ஏற்படும் இது நம் பூமியை போல மிகப்பெரிய அளவில் ஏற்படுவதுல்லை மிகச்சிறிய அளவில் மட்டும் இருக்கும்
இந்த நடுக்கம் ஏற்பட காரணம் நம் பூமியின் அதிக ஈர்ப்புவிசைதான்.
8. நிலவில் நீர் உள்ளதா
நிலவில் நீர் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ஆனால் இது நிலவின் மேற்பரப்பில் இல்லாமல் நிலவின் அடிப்பகுதியில் உரைபனியாக உள்ளது.
9.நிலவிற்கு சென்றவர்கள்
இதுவரை நிலவிற்கு 12 நபர்கள் சென்றுள்ளனர் இவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் அதுவும் இவர்கள் அனைவரும் அப்பல்லோ என்ற வின்கலத்தில் பயனித்தவர்கள் இவர்கள் 1969 ஆண்டு மற்றும் 1972-ல் நிலவிற்கு சென்றுள்ளனர் அதன்பிறகு கிட்டதட்ட 50 ஆண்டுகள் ஆகியும் நிலவிற்கு எவரும் செல்லவில்லை.
10.நிலவின் அளவு
நிலவின் மொத்த அளவானது மிகவும் சிறியது சொல்லபோனால் புளுட்டோவை விட மிகவும் சிறியது நம் பூமியின் துணைக்கோளான இந்த நிலா.
Comments
Post a Comment