குமரிகண்டம் இருந்ததா உண்மை என்ன? unknown facts about kumarikandam in tamil

 

குமரிகண்டத்தின் வரலாறு(UNKNOWN FACTS ABOUT KUMARIKANDAM)

குமரிகண்டம் கிட்டதட்ட 20,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகம் மற்றும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை ஒன்றினைக்கும் வகையில் இருந்த ஒரு மிகப்பெரிய கண்டம் என்றும் இங்குதான் மனித இனம் தோன்றியது என்றும் பெரும்பாலானோரால் நம்பபடுகிறது. அதுமட்டுமின்றி தமிழ் மொழியும் பிறந்தது என்று கூறப்படுகிறது. இந்த லெமூரியா கண்டம் பற்றிய சில வியப்பான தகவல்களை இந்த பதிவில் காண்போம்.


குமரிகண்டம் தோற்றம்

kumarikandam

இந்த குமரிகண்டம் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தீபகற்ப கண்டம் என்று கூறப்படுகிறது. இது தற்போது கடலுக்கு அடியில் இருப்பதாகவும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்  ஆனால் இன்றுவரை இந்த தமிழ்கண்டம் இருப்பந்ததற்கான எந்த ஆதாரங்களும் கடல் ஆராய்ச்சியில்  கிடைக்கப்படவில்லை , ஆனால் எழுத்துபூர்வமான ஆதாரங்கள் நிறைய உள்ளன நம் தமிழ் மொழியின் பழம்பெரும் நூல்களான தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் போன்றவற்றில் இந்த இலெமூரியா பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.


குமரிகண்டம் பற்றிய ஆராய்ச்சிகள்

இந்த குமரிகண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது அப்படி தென்ஆப்பிரிக்க நாட்டில் உள்ள விட் வாடர்ஸ் ரட்  என்ற பல்கலைகழகம் நடத்திய ஒரு ஆய்வில்  லீவிஸ் ஆஷ்வால் என்பவரின் தலைமையில் மொரிஷியஷின் கடற்கரையில் 3 கோடி ஆண்டுகளுக்கும் பழமையான கற்களை கண்டறிகின்றனர். இந்த தீவில் மற்ற பாறைகள் அனைத்தும் 90 இலட்சம் ஆண்டுகள்தான் பழமையானது இந்த ஒரு விடயம் ஆராய்ச்சியாளர்களை மிகவும் குழப்பமடைய செய்தது . இந்த 3 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள் இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு கண்டமாக இருந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படி இருந்த கண்டம் காலப்போக்கில் இயற்கை பேரழிவுகளாலும்  கண்டதட்டு நகர்வினாலும் கடலுக்கு அடியில் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . அதுபோல் தமிழ்நாட்டின் பண்டைய நகரங்களில் ஒன்றான காவிரிபூம்பட்டினம்  தற்போதுய பூம்புகாரின் கடற்கரையை ஆராய்ச்சி செய்த  கிரகம் அன்ஹாக் என்ற ஆராய்ச்சியாளர் என்ன குறிப்பிடுகிறார் என்றால் இந்த இடம் கிட்டதட்ட 11,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் இதில் குறிப்பிடதகுந்த விடயம் என்னவென்றால் உலகின் பழமையான நாகரிங்களாக கருதப்படும் சிந்து சமவெளி மற்றும் ஹரப்பன் நாகரிகமே வெறும் 4000 ஆண்டுகள்தான் பழமையானது என்பது நமக்குள் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 


குமரிகண்டம் இருந்ததற்கான சான்றுகள்

lemuriya mystery
இந்த குமரிகண்டம் என்ற ஒரு விடயத்தை பெரும்பாலான மக்கள் கிரேக்க கட்டுகதையான கடல்நகரம் அட்லாண்டிஸுடன் ஒப்பிடுகின்றனர் ஆனால் அப்படி நாம் இந்த குமரிகண்டத்தை கதையென்றும் கூறமுடியாது காரணம் தென்னாப்பிரிக்காவில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பழங்குடியின மக்களும் பின்பற்றுகின்ற பண்பாடுகள் மற்றும் மொழிகள் நமது தமிழ் கலாச்சாரத்தை ஒத்ததே ஆகும். அப்படியென்றால் குமரிகண்டம் இருந்ததா எனில் அதற்கு விடைஇல்லை இருப்பினும் இதற்கான காரணம் பூமி உருவாகிய ஒரு சில ஆண்டுகளில் பூமி தற்போது போல் இல்லை. 
 

 

 
பூமி அப்போது வெறும் இரண்டு கண்டங்கள் மட்டுமே இருந்தது ஒன்று லொரேசியா மற்றொன்று கோந்துவானா  இந்த கோண்ட்வானாவில் தான் தற்போதுள்ள ஆப்பிரிக்கா , இந்தியா , ஆஸ்திரேலியா , அண்டார்டிகா அமெரிக்கா  போன்றவை ஒன்றாக இருந்துள்ளன பிறகு கண்டதட்டு பிளவு காரணமாக அவை உடைக்கபட்டு பிரிந்தன் அவ்வாறு நம் நாடு இந்தியா பிரிந்து லொரேசியாவின் மீது மோதியது அப்பொழுதுதான் இமயமலை தோன்றியது . எனவே நீங்கள் படத்தில் காண்பது போல் மடகாஸ்கரையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் மிகப்பெரிய குமரிகண்டம் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் மிகசிறிய அளவில் இருந்திருக்க வாயப்புள்ளது எனவும் குறிப்பிடுகின்றனர் ஏனென்றால் நம் இந்திய அரசாங்கத்தால் ஆழ்கடல் ஆராய்ச்சிகள் என்பது மிகவும் குறைவாகவே நடத்தப்படுகிறது எப்பொழுது நாம் இந்த ஆராய்ச்சிகளுக்கு அதிகளவு தொகைகளை செலவிடுகிறோமோ அப்போழுதுதான் உண்மைகள் தெரியவரும், அதுவரை குமரிகண்டம் என்பது வாய் வழியாக மட்டுமே போற்றக்கூடியதாக இருக்கும்.
      
 நன்றி!

Comments

Popular posts from this blog

முதல் உலகப் போர் பற்றிய உண்மைகள் facts about 1st world war

இஸ்ரேல் பற்றி இது தெரியுமா 10 interesting facts about israel in tamil

தமிழில் free fire பற்றிய உண்மைகள் facts about free fire in tamil