யார் பெரிய சோம்பேறி
யார் பெரிய சோம்பேறி
ஒரு ஊரில் திடீர் என்று ஒரு அறிவுப்பு வந்தது ஊரில் யார் பெரிய சோம்பேறிேயோ அவருக்கு 1 லட்சம் பரிசு என்பதுதான் அந்த அறிவிப்பு.
ஒரு லட்சம் என்றதும் பக்கத்து ஊரில் இருந்த சோம்பேறிகள் அனைவரும் அறிவிப்பு வந்த அரங்கத்தை நோக்கி சென்றுவிட்டனர்.
அரங்க மேடையில் இருந்து ஒருவர் வந்து அனைவருக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு அனைவரையும் பார்த்து ஊரில் இத்தனை சோம்பேறிகள் இருக்கின்றீர்கள் உங்களில் யார் இந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறீர்கள் கலந்து கொல்பவர்கள் கையை மேலே உயர்த்தி காட்டுங்கள் என்றார். அரங்கத்தில் ஒரே சலசலப்புடன் அனைவரும் ஒவ்வொருவராக கையை உயர்தினார்கள். மேடையில் இருந்தவர் அனைவரையும் பார்த்து கொண்டே வந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும் அவருக்கு எதுவும் கேட்காதது போல அமர்ந்து இருந்தார்.
அவரை பார்த்தவுடன் கூட்டத்தில் ஒரே நிசப்தம் நிலவியது, அவரை நோக்கி மேடையில் இருந்தவர் இறங்கி வந்தார்.
வந்தவர் அமர்ந்திருந்தவரிடம் நீங்கள் மட்டும் ஏன் கையை உயர்த்த வில்லை, உங்களுக்கு பரிசு வேண்டாமா என கேட்டார்.
அதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க எதுக்கு கஷ்டபட்டு கையதூக்கி எனர்ஜிய கெடுக்கனும் அதலால்தான் கைய தூக்கல அப்படின்னு சொன்னாரு.
உடனே கூட்டத்துல ஒரே அமைதி நடுவர் இவர்தான் இந்த இடத்துலயே மிக பெரிய சோம்பேறி அப்படின்னு சொல்லி ஒரு லட்சம் பணத்த தூக்கி அவர் கையில கொடுத்துட்டாரு
Comments
Post a Comment