சீனாவின் செயற்கை நிலவு china builds artificial moon in tamil
china builds artificial moon
வணக்கம்! சில மாதங்களுக்கு முன்புதான் சீனா உருவாக்கிய செயற்கை சூரியன் பற்றி நாம் அனைவரும் பேசிக்கொண்டிருந்தோன் இதை பேசிக்கொண்டிருக்கும் இதே வேலையில் சீனாவனது தற்போது செயற்கை நிலவை நாங்கள் உருவாக்குகிறோம் என கூறியுள்ளது இந்த செயற்கை நிலவு எப்படி இருக்கும் எப்படி செயல்படும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
செயற்கை நிலவு
செயற்கை சூரியனை தொடர்ந்து தற்போது சீனா செயற்கை நிலவையும் உருவாக்க உள்ளது இந்த செயற்கை நிலவால் மட்டும் சீன அரசாங்கத்தற்கு வருடத்திற்கு 1000 கோடிக்கு மேல் இருக்கும் பணச்செலவுகளை குறைக்க முடியும் என கூறியுள்ளார்கள் .
நிலவு என்றால் என்ன?
இந்த செயற்கை நிலவு பற்றி காண்பதற்கு முன்னால் நாம் நிலவை பற்றி தெரிந்துகொள்வோம் நம் நிலவுக்கு என்று தனி ஒளி கிடையது இது சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறது எனலாம் இதன் காரணமாக இரவு நேரங்களில் இதன் மூலமாக நமக்கு ஒளி கிடைக்கும். இந்த முறையை பின்பற்றிதான் தற்போது இந்த செயற்கை நிலவையும் உருவாக்கியுள்ளார்கள்.
செயற்கை நிலவு ஆரம்பம்
இந்த செயற்கை நிலவை முதன் முதலில் உலகிற்கு அறிமுகபடுத்தியது ரஷ்யாவாகும் . 1993-ஆம் ஆண்டு பேனர் என்ற பெயரில் 20-மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடியால் செய்யபட்ட செயற்கைகோள் அதாவது செயற்கை நிலவை உருவாக்கினார்கள். இதுவும் விண்வெளிக்கு சென்று பூமிக்கு ஒளியையும் கொடுத்தது ஆனால் பூமிக்கு திரும்பி வரும் வேலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. அதன் பிறகும் மற்றொரு செயற்கை நிலவை உருவாக்கினார்கள் ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்ததால் இந்த திட்டத்தை ரஷ்யா கைவிட்டது.
சீனாவின் செயற்கை நிலவு
தற்போது சீனா இந்த திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது இதற்கான முக்கிய காரணம் சீனாவில் இன்றுவரை மின்சாரம் செல்லாத சின்ன சிறிய இடத்திற்கு கூட ஒளியை கொடுக்கும் விதமாக இதனை உருவாக்கி வருகிறார்கள். நமது பூமியில் இருந்து நமது நிலவானது 3 இலட்சத்து 84-ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ளது ஆனால் இந்த செயற்கை நிலவை பூமியில் இருந்து 500 கி.மீ தொலைவில் நிலை நிறுத்த சீனா முடிவெடுத்துள்ளது.
இது நம் பூமியின் பரப்பில் 3-ஆயிரம் முதல் 6 ஆயிரம் சதுர கி.மீ ஒளியை தரும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் இது உண்மையான நிலவை விட மிகச்சிறியது நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது ஒரு சிறிய நட்சத்திரம் போல தோற்றமளிக்கும் இதனை சீனாவின் செங்குடு நகரத்திற்கு மேலே நிலைநிறுத்தபோவதாக சீனா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இந்த செயற்கை நிலவு உண்மையான நிலவை விட 8 மடங்கு அதிக ஒளியை தரும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் இரவு பகல் போல் மாறுமா என்று கேட்டால் கிடையாது நம் பூமியில் இருக்கும் தெருவிளக்குகளின் ஒளியை விட இந்த செயற்கை நிலவின் ஒளி குறைவு ஆனால் நிலவை விட அதிக ஒளி தரும். இந்த செயற்கை நிலவு என்பது மின்சாரம் செல்லாத பகுதிகளுக்கும் இயற்கை பேரிடர் நடந்தால் மட்டுமே இதனை பயன்படுத்துவோம் என சீனா கூறியுள்ளது. இதுபோல் பல செயற்கை நிலவுகளை உருவாக்கி ஒளி தேவைப்படும் இடத்தில் அதனை நிலைநிறுத்துவதன் மூலம் ஆற்றலை சேமிக்க முடியும் என சீனா நம்புகிறது.
பாதிப்புகள்
இந்த ஒரு செயற்கை நிலா மனிதருக்கு எந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் மற்ற பறவைகள் மற்றும் உயிரனங்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என காலம்தான் சொல்ல வேண்டும் அதுமட்டுமில்லாமல் இது ஒளி மாசை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். என்னதான் நாம் இயற்கைக்கு நிகராக செயற்கையான ஒன்றை உருவாக்கினாலும் அது இயற்கைக்கு ஈடாகாது என்பதே நிதர்சனாமன உண்மை.
Comments
Post a Comment