எந்திரனா ஏலியனா ஏலான்மஸ்க் | elon musk brian chip in tamil
வணக்கம் நண்பர்களே Elon Musk அவரின் அறிவுபூர்வமான சிந்தனையும்,செயல்திட்டங்களும் அனைவரையும் வியப்படையை செய்யும். ஆனால் இவர் செய்யும் பல செயல்களில் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அதை இந்த பதிவில் பாப்போம்.
எந்திரன் மூளை
நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு மூளை தான் அப்படிப்பட்ட மூளையை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஒரு தொழில்நுட்ப்கருவி இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பம் தான் Neuralink இந்த சிப் மூலம் மனிதனின் மூளையை கட்டுப்படுத்தலாம் அனைவரும் வியக்கும் அளவில் பல திறன்கள் இதில் உள்ளன.
வெற்றிக்கு 1500 உயிர்கள் பலி
Elon Musk அவரின் Neuralink நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது பரிசோதனைக்காக குரங்கு பன்றி போன்ற உயிரினங்கள் மீது சோதனை செய்யப்பட்டது.
2018 ஆம் ஆண்டு வெளியான தகவல் எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் அளவில் இருந்தது.ஏனெனில் பரிசோதனைக்காக 1500க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது இதனால் Elon musk சர்ச்சையில் சிக்கினார்.
இந்த இறப்புக்கு இந்த தொழில்நுட்பத்தை விரைவில் சந்தைக்கு கொண்டு வரும் என்ற அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது.
சிப் எப்படி பொருத்தப்படுகிறது
இந்த சிப்பை மனித மூலையில் இரத்தம் வராமல அனஸ்திஸ் யா கொடுக்காமல் 30 நிமிடத்தில் இந்த சிப்பை மூளையில் இணைக்கலாம்
நமது தலையில் ஒரு சீப் இருப்பதை நம்மால் உணரவே முடியாது இந்த ஆபரேஷனுக்கு தலையில் சிறு துளை இட்டால் மட்டும் போதும் இந்த சிப்பில் 3000 எலக்ட்ரீடுகள் (electrode) உள்ளன.
NEURALINK நன்மை
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் உடல் குறைபாடுகளை நீக்கலாம். பார்வை குறைபாடு பேச்சு குறைபாடு காது கேளாமை போன்ற குறைபாடுகளை குணப்படுத்தலாம்.
மன அழுத்தம் மனசோர்வு அமைதியின்மை மறதி போன்ற மனம் சார்ந்த குறைகளை எளிதில் சரி செய்து விடலாம்.
ஒருவரின் குழந்தை பருவத்தின் நினைவுகளை இதன் மூலம் மீட்டெடுக்க முடியும்.
NEURALINK அம்சங்கள்
இந்த சிப் பேட்டரி ஒரு நாள் முழுக்க பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிறது.
வயர்லெஸ் முறையில் இந்த சிப்பின் பேட்டரியை சார்ஜ் செய்யலாம்.
போன் கணினி போன்ற எலக்ட்ரிக்கல் நிறுவனங்களுடன் இதை இணைக்கலாம்.
இந்த சிப்பை மனித மூளையில் இணைக்கவும் நீக்கவும் அதிகபட்ச 30 நிமிடங்கள் போதுமானது.
Elon Musk கொண்டுவரும் நியூராலிங் ஷிப் மனித மூளையை கட்டுப்படுத்தும் அளவிற்கு இந்த தொழில்நுட்பம் இருக்கு. வருங்காலத்தில் இந்த சீப் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்குமா இல்லை எதிர்மறாக இருக்குமா…?
Comments
Post a Comment