பாண்டியர் வரலாறு Pandyar History




பாண்டியர் வரலாறு


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். முச்சங்கங்கள் வாயிலாக தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகின்றது.பழங்காலத்தில் பாண்டியன் தலைநகரமான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. அதற்குப்பின் கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது. இரண்டாம்கோளில் கபாடபுரமும் அழிந்தது. அதன் பிறகு மதுரை மூதூரில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது. பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந் நகரே கூடல் நகர் என்று பெயர் பெற்றது. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் பெருமையின் அடையாளமாக தொல்காப்பியம் ஏற்றப்பட்டது.



பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். துறைமுக நகரமாக கொற்கை இருந்தது. இவர்களது சின்னம் மீன். இவர்களது அடையாள பூவாக வேம்பு இருந்தது. சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவன் நெடுஞ்செழியன். முதல் தமிழ் தங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர். இடை சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 59 பேர். கடைச் சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 49 பேர். தொல்காப்பியம், நிலந்திரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேறியது.




சங்ககாலப் பாண்டியர்


சங்க காலத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழ கிபி 300 என்று சொல்லலாம். ஆனால் அதன் தொடக்க காலம் எது என்று கூற முடியவில்லை. கிபி 300 க்கு உட்பட்டவை என்று கருதத்தக்க சங்க நூல்களில் பாண்டியர் பலர் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை இரண்டு. ஒன்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பது மற்றொன்று, தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பது.




முன்னவன் கோவலன் காலத்தில் வாழ்ந்தவன்; சிறந்த புழவன்; மிக்க வீரம் படைத்தவன்; ஆரியப்படை கடந்தவன்; நீதி முறைக்கு அஞ்சியவன்; ஓவனை கோவலனை கோவலனைக் கொல்வித்தது தவறு என்பதை அறிந்தவுடன் தனது முறை தவறியதற்கு வருந்தி உயிர் விட்டவன். அவனது கோப்பெருந்தேவியும் உடன் உயிர் நீத்தாள்.




ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைகளுள் கற்றவனுக்கு மிகுதியாக விரும்புபவன். சமுதாயத்தில் கல்வி கற்றவன் தாழ்ந்த வனாயினும் உயர்ந்தவர் ஆவன் யோசனையை கேட்பர். அவனது யோசனையை அரசனும் மதிப்பான். எனவே, கற்றவனே வீட்டிலும் சமுதாயத்திலும் அரசியலிலும் சிறப்பு பெறுவான். ஆதலால் எப்பாடுபட்டாவது ஒவ்வொருவரும் கல்வி கற்பது இன்றியமையாததாகும், என்ற பொருள் தரும் புறநானூற்றுப் பாடலை பாடியவன் இவனே.




அடுத்த நெடுஞ்செழியன் சிறுவனாக இருந்தபோதே பட்டம் ஏற்றான். அவன் மீது சேரன், சோழன் என்ற முடியுடைய வேந்தர் இருவரும் திதியன், எழினி முதலிய ஐம்பெரும் வேளிரும் படையெடுத்தனர். இளைஞனான நெடுஞ்செழியன், ' இப்ப பகைவரை யான் வெல்லேனாயின், குடிபழி தூற்றுங் கோலேனாகுக! மாங்குடி மருதனை தலைவனாக பெற்ற புலவர் பெருமக்கள் எனது நாட்டை பாடாது ஒழிவாராக" என்று சூளுரைத்து போருக்கெழுந்தான்ச ஏழுவரோடும் போர் புரிந்தான்; இறுதியில் தலையாலங்கானம் (இன்றைய தலையாலங்காடு) என்னும் இடத்தில் அவர்களை முற்றிலும் முறியடித்தான். அதனால் ' தலையாலங்கானத்து செருவென்ற' வன் என்ற விருதுப் பெயர் பெற்றான். இவனும் சிறந்த புலவன். அவன் பாடிய வஞ்சின பாட்டு புறநானூற்றை அணி செய்கிறது. பத்துப்பாட்டுல் முல்லைப்பாட்டும், நெடுநல்பாசறை அமைப்பு, படைகளின் நிலைமை, பிரிவின்கண் இவன் மனைவி ஆற்றிலிருந்த நிலை, அரண்மனை சிறப்பு, அரச மாதேவி படுத்திருந்த கட்டிலின் சிறப்பு முதலிய பல செய்திகளை இம்மூன்று நெடும் பாட்டுகளிலிருந்து நாம் அறியலாம்.

பாண்டிய மன்னர்கள்


சங்க காலத்திற்கு பின்பு ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். 1) கிபி 575 முதல் கிபி 900 வரை 2) கிபி 900 முதல் 1190 வரை 3) கிபி 1190 முதல் 1310 வரை.




இடைக்காலப் பாண்டிய மன்னர்கள்


ஏறத்தாழ கிபி 300 காஞ்சியில் பல்லவர் ஆட்சி ஏற்பட்டது. வல்லவர் சாதவாகனப் பேரரசின் தென் மாகாண ஆளுநராக இருந்தனர். அவர்கள் பேரரசின் வீழ்ச்சி காலத்தில் தொண்டை மண்டலத்தை கைப்பற்றினர். அம்முயற்சியில் பல்லவரால் தாக்குண்ட களப்பிரர் என்ற கூட்டத்தார் தெற்கு நோக்கி சென்று சோழ பாண்டிய அரசுகளை நிலைகளையே செய்தனர் சுமார் கிபி 572 வரையில் பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சி இருந்தது என்று கூறலாம். கிபி 572 கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிரர் ஆதிக்கத்தை ஒழித்து மீண்டும் பாண்டியர் ஆட்சியை மதுரையில் நிலை நிறுத்தினான். அக்காலம் முதல் சோழப் பேரரசு தலை தூக்கிய கிபி 875 வரையில் பாண்டியர்கள் தம் ஆட்சி பெற்று விளங்கினர்.




பாண்டியன் கடுங்கோன், மாறவர்மன் அவனி சூளாமணி, செழியன் சேந்தன், மாறவர்மன் அரிகேசரி, கோச்சடையான் ரணதீரன், அரிகேசரி பராங்குச மாறவர்மன், நெடுஞ்சடையன் பராந்தகன், இராசசிம்மன் பாண்டியன், முதலாம் வரகுணன், சீமாறன் சீவல்லபன், இரண்டாம் வரகுணன், பராந்தக பாண்டியன்.




மாறவர்மன் அரிகேசரி கிபி 640-670 வரை


மாறவர்மன் அரிகேசரி, தேவாரத்தில் திருஞான சம்பந்தர் போற்றும் நெல்வேலி வென்ற நெடுமாறன் இவன்தான் என்பர். இம்மன்னனின் பட்டத்தரசி மங்கையர்க்கரசி. இவன் சம்பந்தரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவன். இவன் காலத்தில் மதுரைக்கு வந்த யுவான்சுவாங் பாண்டிய நாட்டின் முத்துக்களை பற்றியும், வணிகர்களை பற்றியும் கூறியுள்ளார். இவன் மங்கையர்க்கரசியாரின் கணவன்; முதலில் சமணணாயிருந்து பின்பு திருநாவுக்கரசரால் சைவனாக மாறியவன். இவன் சேரர், பரவர் என்ற குறுநில மன்னர் சிலரை வென்றவன். 'நெல்வேலி வென்ற நெடுமாறன்' இவனே. இவன் ஆட்சியின் தொடக்கத்தில் யுவான்சுவாங் என்ற சீன யாத்திரிகன் பாண்டிய நாட்டை நேரில் கண்டான். அந்நாட்டின் முத்து உற்பத்தி பற்றி எழுதியுள்ளார்; நாடு வளம் பெற்று செல்வத்தால் சிறந்தது என்று கூறியுள்ளான். இப்பாண்டியன் இரணிய கர்ப்ப தானமும் துலாபார தானமும் செய்தவன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.




இவன் மகன் கோச்சடையன் ரணதீரன்; இவன் 'இரணரசிகன்' என்ற சாளுக்கிய விக்கிரமாதித்தனை வென்ற காரணத்தால் தன்னை 'ரணதீரன்' என்று அழைத்துக் கொண்டான்.




அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கிபி 710-765)


அரிகேசரி பராங்குச மாறவர்மன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து கொங்கு நாட்டை வென்றான். திருமங்கையாழ்வார் இவன் காலத்தில் வாழ்ந்த சமகால புலவர். இவன் குறும்பு, நெடுவயல், குறுமடை, மன்னிக் குறிச்சி. திருமங்கை, பூவாளூர், கொடும்பாளூர் முதலிய ஊர்களில் பல்லவனோடு போரிட்டான். அக்காலம் திருமங்கையாழ்வார் காலம். இவன் கொங்குநாட்டை கைப்பற்றினான். கங்க அரசன் மகளான புசுந்தரியை மணந்தான். திருப்பாண்டிக் கொடு முடிவில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு பெரும்பொருள் கொடுத்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இவன் பாட்டினைப்போல் இரணிய கர்ப்பதானமும் துலாபாரமும் செய்தான். வேள்விக்குடி செப்பேடு இவனுடைய சிவபக்தியை போற்றுகின்றது.




நெடுஞ்சடையன் பராந்தகன் (கிபி 765-790)


வேள்விக்குடிச் செப்பேடுகளுக்கும் விவரமா மங்கலர் செப்பேடுகளுக்கும் . உரியவன் இவனே. இவன் பல்லவனை பெண்ணாகடத்தில் தோற்கடித்தான் ஆய்வேளையும், குறும்பனைம்யும் பேரூர்(கோயம்புத்தூருக்கு பக்கத்தில் உள்ள பேரூர்) பெருமாள் கோவில் எழுப்பித்தா. இவன் காலத்தில்தான் கிபி 770 இல் ஆனைமலை நரசிம்ம ஸ்வாமி குகைக் கோவில் குடைய பட்டது.




முதலாம் வரகுணன்


மிகச் சிறந்த போர்வீரன். இவன் தந்திவர்மன் (கிபி 795 முதல் 846 வரை) காலத்தவன். இவன் பெண்ணாறு வரையில் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதியைக் கைப்பற்றினான். இவன் சிறந்த சிவபக்தன் என்பது பட்டினத்தார் பாடலளும் திருக்கோவையார் செயல்களாலும் இனிது புலனாகும்.




சீமாறன் சீவல்லபன் (கிபி 835 முதல் கிபி 862 வரை)


சீமாறன் சீவல்லபன் இவனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு புகழ் பாடும் சிறப்பு உடையவன். இவன் குடமூக்கில தன்னை எதிர்த்த கங்கர், சோழர், கலிங்கர் முதலியவர்களை வென்றான். தெள்ளாறெறிந்த நந்திவர்மன்' காலத்தை சேர்ந்தவர். இவன் ஈழ நாட்டின் மீது படையெடுத்து பல நகரங்களை கொள்ளையிட்டு புத்த விஹாரங்களில் இருந்த பொற்படிமங்களையும் பிற பொருள்களையும் கைப்பற்றி மீண்டான் என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாறு கூறுகின்றது. இவன் பல்லவருடன் தெள்ளாறு, குடமூக்கு, இரிசிக்கரை என்னும் மூன்று இடங்களில் போரிட்டான்ச தெள்ளற்று போரில் மூன்றாம் நந்திவர்மன் வெற்றி கொண்டான் அதனால் தெள்ளறெறிந்த நந்திவர்மன்ட என்று அழைக்கப்பட்டான். இரண்டாம் போர் குடமூக்கில் நடந்தது. இப்போரில் பாண்டியன் வெற்றி பெற்றான். மூன்றாம் போர் இரிசிக்கரையில் நடைபெற்றது. இப்போரில் நந்திவர்மன் மகனான நிருபதுங்கவர்மன் வெற்றி அடைந்தான்.




இரண்டாம் வரகுணன் II (கிபி 862-880)


இவன் தென்னிந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவன். இவன் நிருபதுங்கவர்மன் மகனான அபராசிதன் காலத்தில் பல்லவனை எதிர்த்தான். பல்லவனுக்கு உதவியாக அவன் பாட்டனான கங்க அரசன்(பிருத்விபூதி) கலந்து கொண்டான். விசயாலயன் மகனான ஆதித்த சோழன் பல்லவனுக்கு உதவிபுரிந்தான். போர் குடமூக்கிற்கு 9 கல் தொலைவிலுள்ள திருப்புறம்பியம் என்னுமிடத்தில் கடுமையாக நடந்தது. கங்க அரசன் கொல்லப்பட்டான். பாண்டியன் முற்றிலும் முறியடிக்க பட்டான். ஆதித்த சோழன் உதவியிரவிடில், பல்லவர் தோற்று இருப்பார்கள். பல்லவன் தனக்கு உதவி புரிந்த ஆதித்த சோழனை பாராட்டி விருது வழங்கினான்.




வரகுணன் திருச்செந்தூர் முருகனிடம் மிக்க ஈடுபாடு உடையவன். இப்பெருமானுக்கு ஆண்டு முழுவதும் நாள் வழிபாடு நடத்துவதற்கு 1400 பொற்காசுகளைத் நிவந்தமாக அளித்தான். திருப்புறம்பியப் போரே ஆதித்தன் பேரரசன் ஆவதற்கு அடிப்படை கோலியது. இப்போரினால் பாண்டியர் செல்வாக்கு ஒழிந்தது. பல்லவர் படை வன்மையும் குன்றியது. இவ்விரண்டையும் தனக்குத் துணையாகக் கொண்டு ஆதித்த சோழன் அப்பர் ஆதித்தனைக் கொன்று காளத்தி வரை தனது ஆட்சியை நிறுவினான். பிற்கால சோழப் பேரரசின் அடிப்படை திருப்புறம்பியப் போர் என்பது மிகவும் பொருத்தமாகும்.




இரண்டாம் பாண்டியப் பேரரசு


மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பின் அரியணை ஏறிய சோழன், மூன்றாம் இராசராசன், வலிமை குன்றியவன் . சோழப் பரம்பரையின் வீழ்ச்சியா பாண்டியர் வலிமை பெறத் தொடங்கினர். சிற்றரசு தன்மையையும் உதறி எறியத் தலைப்பட்டனர். பாண்டிய பேரரசு கிபி 1190ல் நிறுவப்பட்டு கிபி 1310(1312) வரை நீடித்து இருந்ததாக தெரிகிறது. பாண்டிய பேரரசு பற்றிய கல்வெட்டுகளும், அந்நியர் பயணக் குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. மார்க்கோபோலோ, வாசாஃப் போன்ற அந்நியரின் பயணக் குறிப்புகளும் கீழ்ஹார்ன், சாமிக்கண்ணு பிள்ளை, N. சேதுராமன் போன்றோரின் காலக்கணிப்பு முறைகளும் பெரிதும் பயன்படுகின்றன. இவர்கள்(பாண்டியர்கள்) கோயில் கொத்தளங்கள் பல அமைத்துள்ளனர். கோபுரங்கள், கோட்டைகள் பல கட்டியெழுப்பினர்.




கிபி 900 முதல் 1190 வரையில் ஆண்ட பாண்டிய நாட்டை ஏறத்தாழ 300 வருட காலம் சோழப் பேரரசர்கள் ஆண்டுவந்தனர். ஆயினும் பாண்டியர் வீரம் அடிக்கடி தலை காட்டியது; அவ்வப்போது சோழர்களால் அடக்கப்பட்டது. மூன்றாம் இராசராச சோழன் காலத்தில் பாண்டியர் வீறுபெற்று எழுந்தனர். அவருள் முதல்வன் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன், கிபி(1216 முதல் 1238 வரை). இவன் காலத்தில் சோழ வீரம் குறைந்தவன். அதனால் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மேல் படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். உறையூரும் தஞ்சாவூரும் கொளுத்தப்பட்டது. பழையாறை என்ற நகரில் வீராபிடேகம் செய்து கொண்டான்; தில்லைக்குச் சென்று கூத்தபிரானை வணங்கி பொன்னமராவதி சென்றான்; அப்பொழுது மூன்றாம் இராசராச சோழனை அழைத்து தனக்கு அடங்கி நாட்டை ஆளும்படி ஏற்பாடு செய்தான்; இங்கனம் சோழ நாட்டை வென்று வழங்கிய காரணத்தினால் இவன் " சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்" எனவும் " சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்" எனவும் பெயர் பெற்றான். இவ்விரண்டும் நடந்த ஆண்டு கிபி 1219.




இவன் வடகொங்கு மன்னனுக்கும் தென் கொங்கு மன்னனுக்கும் இருந்த பகையை ஒழித்தான். கிபி 1231 இல் இவனுக்கும் சோழனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மீண்டும் சோழ நாட்டின் மேல் படையெடுத்தான். இவனிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் தன் மனைவி மக்களோடு வடக்கு நோக்கி ஓடினான். வழியில் அவனது சிற்றரசனான கோப்பெருஞ்சிங்கனால் சிறைப்படுத்தப்பட்டார். பாண்டியன் பழைய அறையில் வீராபிடேகமும் விசயா அபிடேகமும் செய்து கொண்டான். கிபி 1232 ஒய்சாள மன்னனான வீர நரசிம்மன் இராசராசனை விடுவித்தான்ச பாண்டியனை வென்று சோழனை அரசனாக்கினான்




சடையவர்மன் குலசேகர பாண்டியன் கிபி 1190 முதல் 1216 வரை


விக்கிரம பாண்டியனின் ஆட்சி காலம் பாண்டிய மறுமலர்ச்சி காலத்தின் தொடக்கம் என்று பேராசிரியர் ஆரோக்கியசாமி கருதுகிறார். பாண்டியனின் மகன் என்று பலராலும் கருதப்படும் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனே, இப் பேரரசைத் தோற்றுவித்தன. பின்னவன் முன்னவனின் மகன் தானா என்பது உறுதியாக தெரியவில்லை என்று பேராசிரியர் ராமன் கருதுகிறார். குலசேகர பாண்டியன் ஏறத்தாள 1218 ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இவன் தரணி முழு உடையான் என்றும் சேர நாட்டு இளவரசியைத் தம் பட்டத்து ராணியாக கொண்டான். கோதை ரவிவர்மன் இவனுக்கு மைத்துனரானான். இவனுடைய மெய்க்கீர்த்திகள் 'பூவின் கிழத்தி', 'பூதல மடந்தை', ' பூதல வனிதை' என்று தொடங்கின. இவனது பள்ளிக்கட்டில் ' மழவரையன்', ' காலிங்கராயன்', 'முனையதரையன்' என்ற பெயர்களால் அழைக்கப்பட்டான். சேர இளவரசன் ஆகிய கோதை ரவிவர்மன் சேத்தூரிலுள்ள பெருமாள் கோவிலை கட்டினான் இது 'சேரங்கராயன் விண்ணகர்' என்று அழைக்கப்படுகிறது. இவன் ஆட்சியின்போது ' குணசேகர் நரசிங்க மண்டலம்' ஒன்று இருந்ததாக திருப்பரங்குன்றம் கல்வெட்டு தெரிவிக்கின்றது.




இவன் மதுரையை ஆளுங்கால் நானும் தான், மூன்றாம் குலோத்துங்கன் கொங்கு நாட்டை காட்டினான். கருவூரை அவன் கைப்பற்றினான். வெற்றிபெற்ற குலோத்துங்கன் மதுரையில் மீண்டும் முடிசூட்டிக் கொள்ள விழைந்தான். இது கேள்விப்பட்ட குலசேகரன் நிலைமையுணர்ந்து, இச்சோழனை பகைக்கத் தொடங்கினான். சோழனோ நன்றி மறந்தவன் என்று முடிவு செய்து அடக்க திட்டமிட்டான் இருதரப்பு படைகளும் யு மட்டியூர், கள்ளிக்கோட்டை எனுமிடத்தில் மோதினர். பாண்டியனுக்கு சிங்களர் உதவி புரிந்தனர். தோல்வியை தழுவிய பாண்டியனோ, மதுரையை விட்டு ஓடினான். குலோத்துங்கன் மதுரையில் முடிசூட்டிக் கொண்டான். கோபம் கொண்ட சோழன் பல மண்டபங்களை இடித்துப் பாழ்படுத்தினான். 'சோழ பாண்டியன்', ' திரிபுவன வீரத்தேவன்' என்ற விருதுப் பெயர்கள் சூட்டிக்கொண்டான். இச்செயல்கள் கிபி 1202ககு முன் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் மட்டியூர்ப்போர் கிபி 1205 இல் நடைபெற்றதாக பேராசிரியர் இராமன் கருதுகிறார். எப்படியும் தோழன் பாண்டிய நாட்டை சோழ மண்டலத்துடன் இணைத்துக் கொண்டான். சில ஆண்டுகள் கடந்து தாம் வென்ற நாட்டை குணசேகரனுக்கே தந்தான் என்று தெரிகிறது. இவன் அந்தணர்க்குப் பிரம்மதேயம் வழங்கியுள்ளான். எப்படியும் இவன் தோழருக்கு அடங்கிய ஆண்டு வந்தான்.




இவன் தம் பெயரால் வெட்டப்பட்ட குளம் ஒன்றை ஆழப்படுத்துவதற்கு , 100 கிராமங்களை கொடையாக அளித்தான். கப்பலூர்ரைச் சேர்ந்த மானாபரணி மூவேந்த வேளான் வகையிலிருந்து தியாகஞ்சிறிய பேராறு ஒன்று வெட்டினான். இவனாட்சியின் போது நிலங்கள் அழைக்கப்பட்டுள்ளன. இவன் பயன்படுத்திய புது அளவைகள் 'களவழி நாடாள்வான்' என்று அறியப்படுகின்றன அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலவரி ஒழுங்காக. வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. இவன் காலத்து அரசியல் தலைவர்களில் களவழி நாடாள்வான் தலை சிறந்தவன். இவன் கிபி 1288 ஆம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்திருக்கலாம்.




முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கிபி 1216 முதல் கிபி 1239 வரை


சோழரை வீழ்த்தி பாண்டிய பேரரசு நிறுவியவன். மூன்றாம் இராசராசனை அடிபணியச் செய்தான். சோழனுக்கு நாடாள நாடு வழங்கியமையால் சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்" என புகழப்பட்டார். இவனது பட்டத்தரசி முழுதுடையாள் ஆவார்.




மாறவர்மன் சுந்தரபாண்டியன் தம் அண்ணனின் ஆட்சியின்போது இளவரசனாக இருந்தான். கிபி 1716 ஆம் ஆண்டிலேயே அரச பதவி பெற்றான். இவர்கள் இருவரும் விக்கிரம பாண்டியனை பெரிய நாயனார் என்றும், அழக பெருமாள் என்ற தலைவனை மைத்துனன் என்றும் கருதுவதால், இவன் குணசேகரனுக்குத் தம்பி என்று கூறத் தோன்றுகிறது. இவனது பட்டத்தரசி உலகமுழுவதுமுடையால். இவனுடைய சமகால சோழ மன்னன் மூன்றாம் இராசராசன், குலோத்துங்கனின் படம் வெற்றியா துவண்டு போன பாண்டியர் சோழரை பழிவாங்கத் திட்டமிட்டனர். இந்நோக்குடன் அவன் சோழநாட்டின் மீது படையெடுத்தான் மூன்றாம் இராசராசனை வென்றான். இப்படையெடுப்பு மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலேயே நடந்ததாக தெரிகிறது. உறையூரையும் தஞ்சையையும் கைப்பற்றினான். இவற்றை நாசமாக்கினான். பல மாளிகைகளும், பட்டணங்களும் தீக்கிரையாயின. சில பகுதிகளை பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். சோழன் பழையாறையில் தஞ்சம் புகுந்தான். வெற்றியின் பிறப்பால் உந்தப்பட்ட பாண்டியன் ' 'வீராபிஷேகம்' பண்ணினான். சோணாட்டு மன்னன் என்றும் தம்மை முடிசூட்டிக் கொண்டான். பின் சிதம்பரத்தில் நடராசரை வாழ்த்தி வணங்கினான். தாம் கைப்பற்றிய சோணாட்டை சமயக் கோடைகளாகப் பலருக்கு அளித்தான். இப்படி சோழருக்கு வழங்கியதால் வடபால் வளர்ந்து வந்த போசளரை எதிர்க்க வழி செய்தான்.




போசளர், சோழப்பேரரசுடன் மணவுறவு கொண்டிருந்தனர். பாண்டியரின் எழுச்சியால் அவதியுற்ற சோழரைக் காத்திடவும் அவர்கள் முயன்றனர். வீரநரசிம்மன் சோழருக்குதவ முன்வந்தான். இராசராசனையே சோழ நாட்டுக்கு மன்னராக்கி, போசளரை மடக்கினான்.

இவன் கொங்குநாட்டு அரசுரிமை போரில் விட்டான். வட கொங்கு வேந்தன் பாண்டியன் அவை புகுந்தான். தென் கொங்கு மன்னனும் பாண்டியன் முடி வணங்கி நின்றான். அவர்களிடையே ஏற்பட்ட போட்டி பகைமைகளை தீர்ப்பு, அவர்களுக்கு நண்பனானான். கொங்கு மன்னர்கள் பாண்டியருக்கு நண்பராய் இருந்தனர்.




மூன்றாம் இராசராசன் ஒழுங்காய் திரை செலுத்த வில்லை 1123 ஆம் ஆண்டு தன் பெரும் சோணாடு நோக்கி ஏவினான். சோழன் வெற்றி கொல்லப்பட்டான். சோழர் ஆட்சியில் இத்துடன் முடிவடைந்ததாக தெரிகிறது. திருத்தியும், புதுக்கோட்டையும் பாண்டியர் வசமாயின. வெற்றிக் களிப்பில் பாண்டியன்ச வீராபிடேகமும் , விசயாபிடேகமும் நடத்தினான். இவன் சோணாடு வழங்கியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர் என்றும் சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிடேகமும் விசயாபிடேகமும் பண்ணி அருளிய சுந்தரபாண்டிய தேவர் என்று புகழப்படுகிறார். சோணாட்டுப் போர் பெரும்பாலும் இவனுடைய பதினைந்தாம் ஆட்சி ஆண்டுக்குப்பின் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. போசலாரின் தலையீட்டால். இவன் சோணாட்டில் தம் ஆட்சியை நிலைநாட்ட இயலவில்லை என்றும் தெரிகிறது. இப்பாண்டியன் போசல அரசன் நரசிம்மனுக்கு திரை எழுதினான் என்று கத்திய கர்ணாமிர்தம் என்ற கன்னட நூல் நிறுவுகின்றது. கிபி 1236 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று போசளர் படைத்தலைவனான 'மகாப்பிரதானி போக தண்ட நாயகன்' பாண்டிய நாட்டின் கண் கொள்ளையடிக்காமல் இருத்தற்பொருட்டு அவனுக்கு காப்புரிமை அளிப்பதற்காக இளையான்குடி வால் மக்களிடம் தனி வரியொன்று வசூலிக்கப்பட்டதாக கூறுகின்றது. போசளர் பாண்டிய நாட்டெல்லையைத் தாக்கினார். பாண்டியன் இது கண்டு மனம் பொருமினான். ஆனால், அவனால் எதுவும் செய்ய இயலாத நிலையில் கோசலை போசலருக்கு அடங்கி இருந்தான்.




இப்பாண்டியனின் மதுரை அரியணை 'மழவராயன்' இன்று அழைக்கப்படுகிறது இவன் வரகுண ஈசுவரம் கோயிலில் " சுந்தரபாண்டியன் சந்தி' நடைபெற வகை செய்தான். இவன் வைணவத் திருத்தலங்களுக்கும் மானியம் வழங்கியுள்ளார். சிவன் கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டியையடுத்துள்ள ரெங்கமலையின் மீது சிவன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.




இவ்வாட்சியின் போது பல அரசு அதிகாரிகள் நல்லாட்சிக்காக அயராது உழைத்துள்ளனர். சோழன் நின்றாடுவானான குருகுலத்தரையன், கண்டன் உதயன் செய்தான், காங்கேயன் திருக்கானப் பேருடைந்தான்,மழவச் சக்கரவர்த்தி ஆகியோர் அவ்அதிகாரிகளில் சிறப்புடையோர். இவர்களில் சிலர் திருத்தலங்களும் கற்றளிகளும் கண்டுள்ளனர். புலவர்களையும், ஆசான்களையும் இவர்கள் போற்றினர். மேலும் திருப்பத்தூர் கல்வெட்டொன்று வேறு 16 அதிகாரிகளை குறிக்கின்றது களவாயில் நாடாள்வானான கண்டன் ஆளுடையானும் ஒருவன்.

பாண்டியன் பல விருதுப் பெயர்களைக் கொண்டிருந்தான்; ஞானசமுத்திரன், கலியுகராமன், அதிசய பாணியதேவர், சோணடு கொண்ட சோணடு வழங்கியருளியதேவர் என்பன சிலர். இவன் பெயரால் வழங்கப்பட்டதே 'சுந்தரபாண்டியன்சதுர்வேதி மங்கலம்'. விழாக்கள், இம்மன்னனின் பெயரால் நடைபெற்றுள்ளன. 'முடிவளங்கும் பெருமாள் சந்தி' இதற்கு எடுத்துக்காட்டு. அதன்படிபலநாணயங்களையும் வெளியிட்டார்.




கோயில் திருப்பணிகள் பலவும் இவன் மேற்கொண்டான். மதுரை திருவாலவா உடையார் சுவாமி சன்னதி ஒன்பது நிலை கிழக்கு கோபுரத்தை கட்டி முடிக்கும் பெரும்பணியை இவன் மேற்கொண்டான். மதுரை மேலமாசி வீதியில் உள்ள 'இம்மையில் நன்மை தருவார் கோயில்' இவனால் கட்டப்பட்டதாகும். சுந்தரபாண்டியன் திருமதிலும், அம்மன் கோயிலில் உள்ள சுந்தரபாண்டிய மண்டபம் மதுரை கோயிலில் இவனால் பணியப்பட்டவை. திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஏழடுக்கு சுந்தரபாண்டியன் திரு கோபுரமும் இவன் அமைத்தது. இக்கோயிலின் பழையமதில், ' திருநீற்று சுந்தரபாண்டியன்' எனினும் பெயர் பெற்ற வழங்குகிறது. இவன் இல்லாளின் பெயரில் திருபுவன மாதேவி நல்லூர் என்ற ஊரையும் ஏற்படுத்தினார்.




இவன் சிறந்த போர் வீரன், இறைப்பற்று உடையோன், கலையுள்ளம் கொண்டோன். அரசியல் ஆண்மையும் நுண்மையும் கொண்டவன். இவன் ஆட்சி காலம் மதுரையின் மீட்புக்காலம்; மறுமலர்ச்சிகாலம்.




இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கிபி 1238 முதல் 1251 வரை


முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி இறுதியின் போது இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் இளவரசனாக இருந்தான். சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று குலசேகரன் என்ற பெயர் கொண்ட மைத்துனரைக் குறிக்கின்றது. இளவரசன் குலசேகரனும், கல்வெட்டில் கண்ட குலசேகரனும் ஒருவரா, வேறானவரா என்பது தெரியவில்லை. இவன் ஏறத்தாள இரண்டு ஆண்டுகள் 1237 - 1238 ஆட்சி புரிந்திருக்கலாம்.




இவனுக்கு அடுத்து அரியணை ஏறியவனே இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன். இரண்டாம் சடையவர்மன் குலசேகரனும், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும் சகோதரர்களாக இருக்கலாம். மூத்தவன் இறந்துவிடவே, இவன் பதவிக்கு வந்தான் என்க. இவனுடைய மதுரை அரியணை ' இரண்டாம் மழவராயன்', ' பல்லவராயன்' என்னும் பெயர்களை கொண்டுள்ளன. இம்மன்னனின் இல்லாள் உலகமுழுவதுடையால். இவன் மாறவர்மன் விக்கிரம பாண்டியனுக்கு உடன் பிறந்தான். சோழ மன்னன் வீர சோமேசுவரன் இவனுக்கு மாமன் என்றும் தெரிகிறது. விக்கிரம சோழன் தூண்டுதலால் இவன் பல நிவதங்கள் அளித்துள்ளான். போசலரி செல்வாக்கு பாண்டிய நாட்டில் பெருகியுள்ளது. திருமயத்தில் வைணவருக்கும், சைவருக்கும் ஏற்பட்ட மோதலை போசளர் தீர்த்து வைத்தனர். போசளர் பிரேசிலில் சோமேஸ்வரன் பெயரில் ஓரூர் அமைக்கப்பட்டது. மூன்றாம் ராஜேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, பாண்டியனை திரை செலுத்த செய்தான். போசளர் தலையீட்டினால் பாண்டியன் தலை தப்பிற்று. வீர சோமேசுவரன் தம் கல்வெட்டுக்களில் ' அது இராஜேந்திரன் போரில் வென்றான்' என்றும் ' பாண்டியன் குலக்காவலன்' என்று கூறிக் கொண்டான். நாங்குநேரி கல்வெட்டு ' இரணசிங்க வீரன் தெரிந்த வில்லிகள்' என்ற படைப்பிரிவை குறிக்கின்றது. ஐயன் மழவராயன் போன்ற அரசியல் அதிகாரிகள் இவன் ஆட்சியின் போது புகழடைந்தனர். ' வாழவல்ல பாண்டீஸ்வரர்' கோயில் இவன் ஆட்சியின்போது கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கிபி 1251 முதல் கிபி 1768 வரை


சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேரரையும், ஹொய்சளரையும்வென்றான். தெலுங்குச் சோழ நாடு, மகதம், காகதீயம் முதலிய நாடுகளை வென்றதனால், "எம்மண்டலமும் கொண்டு அருளிய சுந்தர பாண்டிய தேவர்" என புகழப்பட்டார்.




இரண்டாம் பாண்டியப் பேரரசின் பெரும் பேரரசன் இவனே. பாண்டிய பேரரசு அதன் பரப்பிலும், பெயரிலும் விரிவடைந்து உச்ச நிலையை அடைந்தது. இவன் ' எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர்' என்றும், ' எல்லாம் தலையானான பெருமாள்' என்றும் ' காஞ்சி புரவரதீஸ்வரன்' என்றும் 'சேரனை வென்ற பாண்டிய தேவன்' என்றும், ' ஹேமாச்சாதானராஜக' என்றும். ' மகா ராஜாதிராஜ ஸ்ரீ பரமேஸ்வரர்' என்றும் ' மரகதப் பிருதுவி பிரித்' என்றும் 'கோயில் பொன் வேய்ந்த பெருமாள்' என்றும் பல விருது பெயர்களால் அழைக்கப்பட்டார்.




இப் பாண்டிய பேரரசு வடக்கே நெல்லூர் கடப்பா முதல் தெற்கே குமரி வரை பரவியிருந்தது. சோழ, சேர, தொண்டை நாடுகள் இவனது நாட்டில் பகுதிகளாயின. தொண்டை நாட்டு மன்னர்கள் இவனது பேயராண்மையை தலைமேற் கொண்டு வாழ்நதனர். போசளர் பலம் குன்றிப் போயினர். கொங்கு நாடும், சிங்களம், கேரளா நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன, கேரளம் கப்பம்(பிறை) கட்டப் பணிக்கப்பட்டான். காஞ்சி பாண்டியன் இரண்டாம் தலைநகரமாயிற்று.




இவன் ஈடு இணையற்ற போர்வீரன். திட்டமிட்டு போர் தொடுப்பதில் வல்லவன். இவனுடைய ஓர் வெற்றிகளை ஸ்ரீரங்கம் கோயில் திருப் பூண்டித்துறைக் கல்வெட்டுக்கள் விளம்புகின்றன. நடுகற்களும் இவன் ஆட்சிக்கால வெற்றிகளை படம் பிடிக்கின்றன. மேலும் திருவேந்திபுரம், சிதம்பரம், திருப்புட்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருக்கோவிலின் கல்வெட்டுகளும் இவன் சிறப்பைக் குறிக்கின்றன. மார்க்கோபோலோ என்ற வெனிஸ் நாட்டு பயணியின் குறிப்புகளும், அரேபிய நாட்டு வாஸாபின் குறிப்புகளும் இக்காலத்தை படம் பிடிக்கின்றன.




இக்காலத்தில் சோணாட்டை மூன்றாம் ராஜேந்திரனும், சேர நாட்டை வீர ரவி உதய மார்த்தாண்ட வர்மனும், கண்ணனூரில் போசளரும், பல்லவ நாட்டில் கோப்பெருஞ்சிங்கனும் ஆட்சி செலுத்தி வந்தனர். கொங்குநாடு, மகத நாடு(ஆறகமூர்), காஞ்சிகடுத்து தெலுங்கு பல்லவர் நாடு என்பனவும் நிலைபெற்றிருந்தன. போசளர் பல வாய்க்கப் பெற்றவர். மகத நாட்டை வானவராயர் வாணகோவரையர் ஆண்டனர். காஞ்சிக்கு அடுத்த பல்லவ நாட்டை விசய கண்டகோபாலன் ஆண்டு வந்தான். பல்லவ நாட்டை ஆண்டு வந்த கோப்பெருஞ்சிங்கன் பெரும் வெற்றி வீரன். பாண்டிய மன்னனை எதிர்க்கத் துணிந்தனர் போசளர், காகாத்தியர், கோப்பெருஞ்சிங்கன், சோழர் ஆகியோர். இவர்களில் முதன்மையானவர் போசளரே.




இச்சிற்றரசர்களையும், பேரரசர்களையும் திட்டமிட்டுப் போராடி வென்றான். முதன்முதலில் தம் தடைகளை சேரநாடு நோக்கி ஏவி, அந்நாட்டு மன்னனை வென்று, அளித்து, சேரனை திறை செலுத்தக் கட்டளையிட்டான். இதனை அடிப்படையாகக் கொண்டுடே, ஜம்புகேஸ்வரர் கோயிலில் சேரனை வென்றான்; ' திருநாள்' கொண்டாட செய்தான். திருநெல்வேலி கடுத்த ஊர், ' இரவி வென்ற சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டது.




சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் போர் வீரன். ஆனால் அவன் பாண்டியனுக்கு இணையன்று. இவன் சோணட்டைத் தாக்கினன் சோழன் திறை செலுத்தும் மன்னனாக மாற்றப்பட்டான். ஈச்சோழன் மரணத்துக்குப் பின் சோழ நாடு பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டது.




போசளர் பாண்டியரை எதிர்க்கத் துணிந்தனர். போசளத் தலைவன் சிங்கணன் போரில் மாண்டான். கண்ணனூர் கொப்பம் பாண்டியர் வசமாயிற்று. பெருஞ்செல்வம் பாண்டியர் வசமாயிற்று.




சிங்கள மன்னனும் வெற்றி கொல்லப்பட்டான். என்ணற்ற யானைகளும், குதிரைகளும் பாண்டியர் வசமாயின. முத்துக்குவியல்கள் பாண்டிய படைகளுக்கு கிட்டின. பாண்டியனின் கடற்படை வலிமையை இப்போர் காட்டுகிறது.




அடுத்தபடியாக, அவன் கருநாடகத் தலைவன் சோமனை வென்று கொன்றான். இவனுக்கு நண்பனாக நடித்து, போசளருக்கு உதவியவன் சோமன். திருச்சி பொருள் கொல்லப்பட்ட துரோகி சோமனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இவன் கர்நாட மன்னன் ஒருவனை வென்று, யானைகளை திரையாக கொண்டான்; இக்கர்நாடக மன்னன் வீரராமனாதனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.




சேந்தமங்கலத்தை தம் படைவலிமை இடமாகக் கொண்டு கோப்பெருஞ்சிங்கன் தாக்கப்பட்டான். காடவ அரசன் பாண்டியனுக்கு அடிபணிந்தான். எண்ணற்ற யானைகளும், குதிரைகளும், இதர செல்வங்களும் பாண்டிய வசமாகின. கோப்பெருஞ்சிங்கன் பாண்டியன் மேலாண்மையை ஏற்றுக்கொண்டபின் நடைபெற்ற போசள போரில் பாண்டியனுக்கு உதவி புரிந்ததாக தெரிகிறது.




பின் மகத நாட்டு வாணாதிராயர் வெற்றி கொல்லப்பட்டனர். அந்நாடு பாண்டியர் வசமாயிற்று. தெலுங்குச் சோழர் இப்பாண்டியனிடம் தோல்வியுற்றனர். சிற்றரசனாகிய கந்த கோபாலன் போரில் வெற்றி கொள்ளப்பட்டு, கொல்லப்பட்டான். காஞ்சியும் கைப்பற்றப்பட்டது. கொங்கு நாடும் முற்றுகையிடப்பட்டு, பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டது. பின் பாண்டியன் காஞ்சியில் தன் தலைநகரை நிறுவினான்.




இறுதியில் காகதீய மன்னன் கணபதியும், பாண்டியனிடம் தோல்வியுற்றான். இவ்வெற்றிகளிப்பால் வெல்லுரில் வீராபிஷேகம் நடத்தினான். கிருஷ்ணா நதி வரை பரவிற்று.




இவன் செய்த அறக்கொடைகள் ஏராளம்; தில்லையம்பல பெருமான் அடிபணிந்து துலாபாரம் தானங்கள் செய்தான். உன்னால் வேய்ந்தன். சிதம்பர விஷ்ணு, சிவன் கோயில்களுக்கு பல மானியங்களை வழங்கினான். அக்கோயிலின் மேலைக் கோபுரம் சுந்தரபாண்டிய கோபுரமென அழைக்கப்படுகிறது. மதுரை சுந்தரேஸ்வரர் கோயிலின் கீழைக் கோபுரம் இவனால் கட்டப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் அழகுபடுத்தினான்; விரிவுபடுத்தினான்; தங்கத்தாலான நரசிம்ம உருவத்தை அளித்தான். நரசிம்மா உருவம் பொரித்த பொன்வேய்ந்த கூரையையும் கட்டினான். அவ்வாலய நடுப்பகுதியை பொன்னால் வேய்ந்தான். கருவறைத் திருமால் பொன் உருவத்துக்குத் தம் பெயரை சூட்டி மகிழ்ந்தான். ஆலயத்தில் தங்ககலன்கள் நிறைந்த உணவறையைும் கட்டினான். சித்திரை திருவிழா ' உலா' நடத்த உத்தரவிட்டான். அக்கோவிலுக்கு அவன் செய்த தேவைகள் அளித்த கொடைகள் எண்ணிலடங்காதவை. கோவிலொழுகு என்ற வைணவ நூல் இவற்றை உறைப்பதுடன் கல்வெட்டுக்களும் எடுத்துரைக்கின்றன.




மேலும் தஞ்சையிலுள்ள திருக்கோயிலில் சிவன் கோயில் திருப்பணி குறைவற நடைபெற்றது. பல குடில்களில் இப்பாண்டியன் சந்தி விழா படிமங்கள் எடுத்தான். நாட்டிய, நாடக, இசை மாதர்களை போற்றினான். அவர்களுக்கு பரிசில்கள், நில மானியங்கள், அரசு அதிகார விருதுகள் பல வழங்கினான். கோயில்களில் நாட்டிய மண்டபங்கள் கட்டியதாகவும் தெரிகிறது. இதற்கு எடுத்துக்காட்டு அழகர்கோயிலில் அவனால் கட்டப்பட்ட மண்டபமே திருவைகுண்ட விஷ்ணு கோவிலின் சுந்தரபாண்டிய கோபுரம் இவனால் எழுப்பப்பட்டது.




மேலும் இவன் அவனிவேந்தராமன், 'இராஜ சூர்யா', சித்திபதிரவி', ' இரண்டாவது இராமன்' போன்ற பிற விருது பெயர்களையும் கொண்டிருந்தான்.




இவன் கால பாண்டிய நாட்டையும், அதன் பரப்பையும், அதன் ஆட்சி சிறப்பையும், மன்னன் தீரத்தையும், மக்களின் மன மகிழ்ச்சியையும், செல்வச் செழிப்பையும் கேள்விப்பட்ட மார்கோபோலோ இந்நாட்டை வியந்து பாராட்டியுள்ளார். இவளுடைய கூற்றுப்படி தமிழகத்தில் இறையாட்சி இருந்ததாக கருதத் தோன்றுகிறது. இவனுடைய இறுதியாண்டு திட்டவட்டமாகத் தெரியவில்லை.

மேற்கூறிய செய்திகள் மூலம் இவன் இணையற்ற போர்வீரன்; சமய பொறையுடையோன் தெய்வ பக்தி மிக்கோன்; தெய்வீக செயல்கள் புரிவோன் பேரரசன் என்று கூறுதலில் குறையில்லை.




சடையவர்மன் வீரபாண்டியன் (1218 முதல் 1763 வரை அல்லது 1253 முதல் 1274 வரை)


இவன் கிபி 1853 ஆம் ஆண்டு முதல் இணையாட்சி புரியும் அரச பகர ஆளுனராக நியமிக்கப்பட்டான். இவனுடைய கல்வெட்டுக்கள் கிபி 1274 வரையிலும் கிடைத்துள்ளன. சிலர் கருத்துப்படி இவன் கிபி 1268ஆம் ஆண்டு வரை நல்லாட்சி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இவனுடைய கல்வெட்டுக்கள் பாண்டிய நாடு, சேர நாடு, தொண்டை நாடு, கொங்கு நாட்டிலும் கிடைத்துள்ளன. இவற்றில் அதிகம் திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து கிடைத்துள்ளன. இவன் ஈழப்போரில் நாட்டு மன்னனை கொன்றான். திரிகோணமலை திரிகடகிரியில் மீன்கொடி பொறித்து வைத்தான். தில்லையில் ட வீரபாண்டியன் திருமண்டபம்ட இவன் பெயரில் உள்ளது. இவன் 'கொங்குகீழக்கொண்டு, கொடுவடுகு கோடழிந்து' என்று புகழப்படுகிறான். ' தங்கையிருவரையும், காவியுங்கைக் கொண்டான்ட என்று கூறப்படுகிறது. மேலும் கதந்தகோபாலயும், போசளணையும் வென்றதால் ' வல்லனை வென்றான்' என்று அழைக்கப்படுகிறான். இவனுடைய இல்லாள் சொக்கத்தாண்டாளான உலகம் முழுதுடையாள் என்று தெரிகிறது. இவன் காலத்து நீதி வழுவா நெறிமுறையும், நிலக்குலத்தகை முறையும், ஆட்சியில் ஆலோசனைக் கூட்டமும் புழகத்திற்கு நாணயங்களும் இருந்தன என்று கருதப்படுகிறது. இவன் கிபி 1281இல் இறந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவனும் தம் முன்னோர் ஆண்ட நாட்டை பிறர் வசமாக்காமல் பாதுகாத்தான்.




மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கிபி 1263 முதல் கிபி 1311 வரை)


மாறவர்மன் குலசேகர பாண்டியன் 1274 ல் சேரர் தம் கொல்லத்தை வென்றான். இதனால் கொல்லம் கொண்ட பாண்டியன் என பெயர் பெற்றான். மார்க்கோபோலோ வாசப் ஆகியோர் குலசேகரன் ஆட்சியை சிறப்பித்துள்ளனர். இலங்கை மீதும் தொண்டை நாட்டின் மீதும் படையெடுத்தான். பாண்டியருள் இறுதி சிறப்பு பெறும் மன்னனாக விளங்கினார்.




இவன் கிபி 1289 ஆம் ஆண்டு பாண்டிய நாட்டு முடியை சூடிக் கொண்டான். ஏறத்தாள 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். வெளிநாட்டார் குறிப்புப்படி பாண்டிய நாட்டில் 5 பாண்டிய ஆட்சி நடைபெற்று வந்ததாக தெரிகிறது. அவர்களிடையே போர் மூளா வண்ணம் தாயார் காத்துவந்தார் என்றும் மார்க்கோபோலோ கூறுகிறார். இப்பஞ்ச பாண்டியர் ஆட்சியை வாசபும், இலங்கை குறிப்புகளும் அறிவிக்கின்றன. கல்வெட்டுகளில் காணும் பாண்டியர் மாறவர்மன் விக்கிரமன், மாறவர்மன் குலசேகரன், சடையவர்மன் சுந்தரன், சடையவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் சீவல்லபன் என்போர், மாறவர்மன் குலசேகரன் இவர்களின் மூத்தவன்.




மாறவர்மன் குலசேகரனின் கல்வெட்டுகள் ' தேர்போல்' என்று தொடங்குகிறது. இம் மெய்க்கீர்த்தி மூலம் இவன் சோழ நாடு, கொங்குநாடு, மலாடு(சேதி நாடு) , தொண்டை நாடு, தெலுங்கு நாட்டுப் பகுதி மலைநாடு ஆகியவற்றின் திறை பெற்றான் என்று தெரிகிறது. சேர்வைமட கல்வெட்டு இவன் மலைநாடு, சோணாடு, இரு கொங்கு நாடுகள், ஈழம், தொண்டைமண்டலங்கள் வென்றான் என்று தெரிகிறது. ஆரியச் சக்கரவர்த்தி படைத்தலைவன் ஈழத்தை தாக்கினான்; புத்தரின் பற்களை கவர்ந்து கொண்டான் என்றும் தெரிகிறது. ஈழ மன்னன் பராக்கிரமபாகு புத்தரின் பற்களை இனிதின் பெற்றுக் கொண்டான் என்றும் அறிகிறோம். இவன் கொல்லத்தையும் தாக்கி கைப்பற்றினான். இவன் 'சரவண பெல்குளம்' என்ற பகுதியையோ, தெலுங்கு வீமனின் நாட்டுக்கு உட்பட்ட 'குளம்' என்ற பகுதியையோ கைப்பற்றி இருக்கலாம். இவ்வாறு 'குளத்திடத் தெலுங்கு வீமன்' என்ற மெய்க்கீர்த்தி இக்கருத்தினை விளக்குகிறது. கேரளத்தின் கொல்லம் பகுதியை கைப்பற்றியதால், இவன்' கொல்லம் கொண்டான்' என்று அழைக்கப்பட்டார்.




இக்காலத்து பாண்டியன் ஒருவன் (கரூர்) என்ற இடத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்திய தாக தெரிகிறது. இவளோ தம் பதினைந்தாம் ஆட்சியாண்டில் கண்ணன் ஊரில் தங்கியிருந்தார் என்று தெரிகிறது. இவன் விக்கிரம பாண்டியனை நடு நாடு, தொண்டைநாடு பகுதிகளுக்கு பிரதிநிதியாக நியமித்தார்.




இவனுடைய திருநெல்வேலி கல்வெட்டு இவன் கேரளத்தையும், போசளரையும், சோழரையும் வென்ற செய்தியை காட்டுகிறது. வாணாதிராயர் காலிங்கராயன் இவன் ஆட்சியின்போது பல கோயில்களையும் அக்கிரகாரங்களையும் நிறுவியுள்ளார். இவர்கள் பாணர்களாயிருக்கலாம். அப்பாணர்மாவேலி மன்னர் வழியினர் என்று தெரிகிறது. இவனது திருவருள் பெற்ற ஒரு கல்வெட்டு உறையூரில் உள்ள ஒரு தலைநகரை 'உய்யக்கொண்டான் திருமலை' என்று அழைக்கின்றது. கைப்பற்றிய நாடுகளில் தம் தம்பியரை நியமித்தும் நல்லாட்சி கண்டான். சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே கலாசார உறவுகள் நிலவிவந்தன. கிபி 1280ஆம் ஆண்டு ஜமாலுதீன் என்பவனை சீனாவுக்கு தூதனுப்பி நான். பாண்டியன் அனுப்பிய பொருட்களை பெற்ற சீனன். யாக்திங்பீ என்பவனை பாண்டிய நாட்டிற்கு தூதனுப்பினான். 1282 ஆம் ஆண்டு அவன் சீனாவுக்கு திரும்பினான். கிபி 1285இல் மீண்டும் சீனாவுக்கு இரண்டாம் தூது குழுவினை அனுப்பினான். விலை உயர்ந்த பொருட்களையும் பரிசாக பாண்டியன் அனுப்பிவைத்தான்.




இவனுடைய ஆட்சி ஆண்டு கிபி 1310, 1311, 1312ல் முடிந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். வரலாற்றாளர் கிபி 1310இல் என்றும், பேராசிரியர் ராமன் கிபி 1311 முடிந்தது என்றும், ந. சேதுராமன் கிபி 1312 முடிந்ததாகவும் கருதுகின்றனர்.

சடையவர்மன் வீரபாண்டியன் மற்றும் சடையவர்மன் சுந்தரபாண்டியன்


இவர்கள் இருவரும் சகோதரர்கள், ஆனால் சுந்தரபாண்டியன் காமக்கிழத்திற்குப் பிறந்தவன் என்பர். நாடாளும் பகை காரணமாகச் சுந்தரபாண்டியன் தமிழகத்தில் முகமதிய ஆட்சியை ஏற்படுத்த கிபி 1310ல் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூரைப் படை எடுத்து வரச் செய்தான். கோவில்கள் பல அழிக்கப்பட்டன. பொருட்களும், கலைப்பொருட்களும் கொள்ளை போயின. இந்நிலையில் தமிழகத்தில் 50 ஆண்டுகள் முகமதிய ஆட்சி ஏற்பட்டது. சிறப்பிழந்தபாண்டியர் தென்பாண்டி நாட்டில் 14 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்தனர். அவர்களுள் குட்டித் திருவாசகம் என போற்றப்படும் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி இயற்றிய அதிவீரராம பாண்டியன், நெல்வேலி மாறன் சடையவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.




மார்க்கோபோலோ, பாண்டிய நாட்டில் செல்வச்செழிப்பிருந்தது என்று கூறும்போது, வாஸாப் பாண்டிய நாட்டில் அரசு போட்டு நிகழ்ந்தது என்றார். இப்போட்டியில் குலசேகரனின் இரு புதல்வர்கள் பங்கு கொண்டனர். விருப்பப்படி மாற்றான் தாய்க்கு பிறந்த வீரபாண்டியனுக்கு முடிசூட்டியதால் கோபம் கொண்ட தம் மகன் சுந்தரபாண்டியன் கிபி 1310இல் தந்தையை கொன்றான் என்று தெரிகிறது. ஆனால் இவனுடைய கல்வெட்டுக்கள் கிபி 1312 வரை இருப்பதை சேதுராமன் காட்டுகிறார். ஆகவே சேதுராமன் கருத்துப்படி, பாண்டிய நாட்டின் அரசுரிமைப் போட்டி ஏற்படவில்லை என்பதும். வாஸாப் பாண்டிய நாட்டில் அரசுரிமைப் போர் ஏற்பட்டதாக தாம் அறிவிக்கப்பட்டார் என்று கூறுகிறார்.




மனம் குமுறிய சுந்தரபாண்டியன் வீர பாண்டியனை எதிர்க்க துணிந்து முஸ்லிம்களின் உதவியை நாடியதாக தெரிகிறது. மாலிக்காபூர் மதுரையை நோக்கி படையெடுத்தான் என்றும் தெரிகிறது. பாண்டிய நாட்டில் ஏற்பட்ட கழகத்தை பயன்படுத்தி சேரன் ரவிவர்மன் பாண்டிய நாட்டைத் தாக்கி காவிரிக்கரை வரை முன்னேறியதாக தெரிகிறது. இவ்வாறு பாண்டியர் போட்டியிலும், அன்னியர் படையெடுப்பாலும், அல்லலுற்ற பாண்டிய பேரரசு சிதறுண்டு போயிற்று. மதுரையில் டெல்லி சுல்தான்கள் ஆட்சி நிறுவப்பட்டது.

🔥THANKS🔥🙋

Comments

Popular posts from this blog

முதல் உலகப் போர் பற்றிய உண்மைகள் facts about 1st world war

இஸ்ரேல் பற்றி இது தெரியுமா 10 interesting facts about israel in tamil

தமிழில் free fire பற்றிய உண்மைகள் facts about free fire in tamil