வணக்கம்! இந்த பதிவில் இஸ்ரேல் பற்றிய சில சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான(facts about israel) உண்மைகளைதான் பார்க்க கோகிறோம். அதிக மரங்களை கொண்ட நாடு இந்த உலகில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று அதிக மரங்களைக் கொண்ட ஒரே நாடு இஸ்ரேல் மட்டும்தான். மிகச்சிறிய பாலைவனம் இந்த உலகின் மிகச்சிறிய பாலைவனமான ஜூடியன் பாலைவனம் இஸ்ரேல் நாட்டில்தான் இருக்கிறது. பழமையான மரம் இஸ்ரேலில் உள்ள பழமையான மரம் ஐன் ஹட்சேவாவில் உள்ள சீமைக்கருவேல மரமாகும், இது 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கழிவு நீர் மறுசுழற்சி இஸ்ரேல் தான் கழிவுநீரில் 90% மறுசுழற்சி செய்கிறது, இது தண்ணீர் மறுசுழற்சியில் உலகின் முன்னணி நாடாக உள்ளது. அமெரிக்காவில், 1% கழிவு நீர் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. தொழில்நுட்ப முன்னேற்றம் 3,000 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுடன், இஸ்ரேல் உலகிலேயே அதிக ஹைடெக் நிறுவனங்களைக் கொண்ட நாடாக உள்ளது. ஐன்ஸ்டீன் 1952 ஆம் ஆண்டில், உலகின் பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது...
Comments
Post a Comment